தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழி லாளர்கள் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பத்தூர் , ஜுலை 23 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் முன்பு தமிழக ஊரக வளர்ச்சித் துறை சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பல் வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் முக்கிய கோரிக்கைகளாக
திருப்பத்தூர் மாவட்டத்தில் பணி செய்து வரும் சுகாதார உறுப்பினர்களுக்கு 2024 முதல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்
மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் களுக்கு மாவட்ட ஆட்சியரால் நியமிக் கப்படும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட நிரந்தர பணியிடத்தில் பணி நியமையும் வழங்க வேண்டும்
கொரோனா கால தடுப்பு பணியில்
ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக் கும் அரசு உத்தரவாதம் அளித்து ஊக்க தொகை வழங்க வேண்டும்
கிராம ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அவ்வாறு நிரப்பும் போது தற்காலிகமாக பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணி யாளர்களை இணைந்து நிரப்ப வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக