கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி


கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆழ்ந்து சென்ற அமைப்பு மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகிய சார்பில் கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்களுக்கான சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் சுவீட்டி, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பெண்கள் சமூக ஊடங்கங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். படங்கள் பதிவிடுதல், வீடியோக்கள் பதிவிடுதல், ஸ்டேடஸ் வைத்தல் மூலம் படங்களை வேறு நபர்கள் எடுத்து தவறாக சித்தரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சமூக ஊடங்கங்கள் சிலருக்கு மட்டுமே வருவாய் வாய்ப்புகள் உள்ள நிலையில் வருவாய் கிடைக்கும் என்கிற ஆசையில் பயன்படுத்தி நேரம் காலம் விரையம் ஆவதோடு பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே சமூக ஊடக பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். சமூக ஊடக பாதிப்புகளுக்கு 1930 என்கிற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்.


ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆல்பர்ட் பேசும்போது பெண்களின் உடலில் ஏற்படும் ஊட்ட சத்து குறைபாடு அவர்களின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியை பாதிக்கிறது. கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் கவனம் செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது.  தற்போதைய உணவு கலாச்சாரமாக பீசா, பார்க்கர், சபர்மா என பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் இதர சேர்மங்களை செரிமானம் செய்ய இயலாமல் வயிறு பாதிக்கும். இவற்றில் ஊட்ட சத்துகள் இருக்காது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும்.


ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் செல்வி பேசும்போது கீரைகள், பழங்கள், காய்கறிகள், பால் அசைவ உணவுகள் போன்றவை உடலில் தேவையான சத்துகள் பெற உதவுகிறது.  தரமான உணவு மூலம் மட்டுமே தரமான ஊட்டச்சத்து கிடைக்கும். இதர உணவுகள் உடல் பருமனை அதிகரித்து சிறுவயதிலேயே பல்வேறு நோய்களை உருவாக்குகிறது என்றனர்.


நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad