அருள்மிகு ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் திருக்கோயில் புரவி எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் வடக்குசந்தனூர் சாலையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் திருக்கோயில் புரவி எடுப்பு திருவிழா விசுவாவசு வருடம் ஆனி மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள், கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக காப்பு கட்டுதல், புரவி எடுப்பு திருவிழா மற்றும் கண் திறத்தல், வள்ளி திருமணம் நாடகம் மற்றும் புரவி தூக்கி கோயிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக