மானாமதுரை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

மானாமதுரை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்


 மானாமதுரை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர், குத்துவிளக்கேற்றிய அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மா. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி பொற்கொடி, நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் மானாமதுரை நகர, ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad