தனது சொந்த செலவில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

தனது சொந்த செலவில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்.


தனது சொந்த செலவில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிய திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடைகளை சிவகங்கை மாவட்ட அறங்காவலர், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு ஜெயமூர்த்தி அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கினார்.


இந்நிகழ்வில் மானாமதுரை வட்டார கல்வி அலுவலர் திருமதி அஸ்மிதா பானு, டாக்டர் சிவசங்கரலிங்கம், பெரியகோட்டை கிராமத்தலைவர் செல்லம்பிள்ளை, வழுதணி கண்மாய் நீர்ப்பாசன கமிட்டித்தலைவர் ராதாகிருஷ்ணன், தெக்கூர் ரமேஷ், ஞானம் பள்ளி மேலாண்மை குழு தலைவி செ.சரண்யா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad