சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் நடவடிக்கை மற்றும் மானாமதுரை மருத்துவ கழிவு சுத்திகரிப்பு கட்டுமான பணிக்கு எதிராக தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் சிவகங்கை மாவட்ட தாய் தமிழர் கட்சியின் சார்பாக சத்தீஸ்கரின் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் காகர் என்ற ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்தவும், பழங்குடி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திடவும், மக்கள் போராட்டங்களை புறந்துள்ளி விட்டு மக்கள் எதிர்ப்பை மீறி மானாமதுரை சிப்காட்டில் நாசக்கார திட்டமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்திடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாய் தமிழர் கட்சியின் தலைவர் பி. ம. பாண்டியன் அவர்களின் முன்னிலையிலும், மாநில பொதுச் செயலாளர் ச. அ. செல்வம் அவர்களின் தலைமையிலும் திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் தொடக்க உரையை மாநில இளைஞரணி செயலாளர் ஹரிசுதனும், தாய் தமிழர் கட்சித் தலைவர் பாண்டியன், தமிழர் முன்னணி பொதுச் செயலாளர் இமயம் சரவணன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் கிருட்டிணன், தமிழ் தேசிய பேரியக்கம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கதிர் நிலவன் மற்றும் தாய்நாடு மக்கள் கட்சி தலைவர் பூமிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நன்றி உரையை மாவட்ட இளைஞரணி செயலாளர் மருதுபாண்டி நிகழ்த்தினார். இந்நிகழ்வில் தாய் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக