செய்துங்கநல்லூர் ஜூலை 7 தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோவில் உள்ளது. இதனை தெஷண பண்டரிபுரம் என்றும் சொல்வார்கள். 2009 க்குப் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தற்போது திருப்பணிகள் நடந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 7 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக 5 காலம் ஓமகுண்ட யாகசாலை பூஜை அர்ச்சகர் சர்வசாதகம் ஸ்ரீநிவாசராகவன் தலைமையில் நடந்தது.
இன்று காலை 4 மணிக்கு விஸ்வரூபம். 6.30 மணிக்கு யாகச பூஜை நடந்தது. 8.15 மணிக்கு பூர்ணாகுதி. நாலாயிர திவ்யப்பிரபந்தம், வேதபாராயணம் நடந்தது. பின்னர் 8.50 மணிக்கு கும்பங்கள் புறப்பட்டு பிரகாரமாக வந்து பெருமாள். தாயாயர்கள் விமானஙகளுக்கும் மூலவர் மற்றும் இதர சன்னதிகளுக்கும் சென்றது.
சரியாக 9.25 மணிக்கு விமான கலசங்களில் தீர்த்தம் விடப்பட்டது. பின்னர் மூலவருக்கும் அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு சாத்துமுறை கோஷ்டி நடந்து தீர்த்தம்.சடாரி. பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பார்த்திபன், அறங்காவலர் தலைவர் கோமதி ஜானகிராமன். செயல் அலுவலர் கோவல மணிகண்டன். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக