![]() |
| படம் : மாதிரி உணவு |
திருவள்ளூர், ஜூலை 7-
திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் அமைந்துள்ள தனியார் மருந்தியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், இதில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர், இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
மாணவர்கள் அளித்த தகவலின்படி, கல்லூரி உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுத்தமின்றி, சாப்பிட முடியாத வகையில் உள்ளது. தினசரி வழங்கப்படும் உணவில் சில நேரங்களில் பூச்சிகளும், மனித முடிகளும் அழுகிய பொருட்களை கொண்டு சமைப்பதாகவும் தெரிவித்தனர், இதனால் மாணவர்கள் உடல் நிலை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், சிலருக்கு வாந்தி, மலச்சிக்கல், வயிற்று உபாதை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல், குடிநீர் தரமும் மிகவும் மோசமாக உள்ளது. இது மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என அவர்கள் கவலைப்படுகின்றனர்.
மாணவர்கள் கூறுவதாவது:
"நாங்கள் ஏற்கனவே பலமுறை இந்த பிரச்சினையை நிர்வாகத்திடம் எடுத்துச்சொல்லியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. சில நேரங்களில், இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை எனவே தயவுசெய்து வெளியே சாப்பிடுங்கள் என்றுவும் சொல்லப்படுகிறது. இது நியாயமல்ல. நாங்கள் கட்டணம் செலுத்தி கல்லூரியில் படிக்கிறோம். உணவு, நீர் என்பது அடிப்படை உரிமை."
மேலும்,
“அருகில் உணவக வசதியும் இல்லாததால், மாணவர்கள் பொறுத்துக்கொண்டு அதே உணவினை சாப்பிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது அவர்களின் உடல்நலத்துக்கும், கல்வி வளர்ச்சிக்கும் தடை ஏற்படுத்துகிறது,” என மாணவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக