திருக்கோவிலூர் நகராட்சியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

திருக்கோவிலூர் நகராட்சியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை


 திருக்கோவிலூர் நகராட்சியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை:


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் அமைந்துள்ள நவீன தகன மேடைக்கு அலுவலகம் கட்டும் பணி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொடங்க நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் கோதம்சந்த், சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், நகர்மன்ற  துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா, திமுக நகர செயலாளர் கோபிகிருஷ்ணன்,நகர மன்ற உறுப்பினர்கள் IR.கோவிந்த், கந்தன்பாபு, உஷா வெங்கடேஷ் சங்க உறுப்பினர் ராஜேஷ்குமார், ஆர்சிசி உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad