காட்பாடியில் மண்எண்ணெய் குண்டு வீசிய வாலிபர்கள் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

காட்பாடியில் மண்எண்ணெய் குண்டு வீசிய வாலிபர்கள் கைது!

காட்பாடியில் மண்எண்ணெய் குண்டு வீசிய வாலிபர்கள் கைது!
காட்பாடி , ஜுலை 22 -

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). இவரது தம்பி சுதாகர் (வயது 27) லாரி டிரைவர் இவர்கள் இருவரது வீடும்அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சிவக்குமார், சுதாகர்ஆகி யோரின் வீடுகளின் மீது மர்ம நம்பர்கள் 2 மண்எண்ணெய் குண்டுகளை வீசினர். இதுகுறித்து பிரம்மபுரம் போலீசார் வழக் குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலை மையில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மண்எண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது சேர்க்காடு பகுதி யை சேர்ந்த புருஷோத்தமன் என்ற நவீன் (வயது 20), கொல்லைமேடு பகுதி யை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 20) என்ப தும், காரில் வந்து மண்எண்ணெய் குண்டு வீசியதும்தெரியவந்தது.அதைத்தொடர்ந்து புருஷோத்தமன் என்ற நவீன், ஜெக தீஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் விவகாரத்தில் மண்எண்ணெய் குண்டு வீசியது தெரியவந்தது.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad