மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் இல்லாத தினம் அனுசரிக்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் இல்லாத தினம் அனுசரிக்கப்பட்டது


மசினகுடி அரசு மேல்நிலை பள்ளியில் பிளாஸ்டிக் இல்லாத தினம் அனுசரிக்கப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், என்.ஐ.ஐ.டி பவுண்டேஷன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் இல்லாத தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சிவகுமார் தலைமை தாங்கினார். 


மசினகுடி காவல் உதவி ஆய்வாளர் தங்கராசு, நிர்மான் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் அமுதா, நுகர்வோர் பிரதிநிதி தேவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 


பிளாஸ்டிக் பொருட்கள் எளிதாக உள்ளதாக எண்ணி பயன்படுத்துவதால் இயற்கை பாதிப்பு ஏற்படுகிறது.  இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் கிலோவுக்கு மேலாக பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குகிறது. தற்போதைய சூழலில் 140 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால்  சூடான  உணவுகளை பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தட்டுகளில் போட்டு சாப்பிடுவதால் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து சென்று வயிற்றில் சேர்ந்து செரிமாணம் ஆகாமல் புற்றுநோய் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதுபோல பிளாஸ்டிக் எரிப்பதால் வெளியாகும் டாயக்சின் மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான டூத்பிரஸ்,  பிளாஸ்டிக் கவர்கள், பால்பயின்ட் பேனா, உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து நிரந்தர பயன்பாட்டிற்கு பயனளிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். வீடுகளில் சேரும் பிளாஸ்டிக்கள் சேகரித்து ஊராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து வாழும் பழக்கம் மாணவ பருவத்த்தில் உருவாக வேண்டும் என்றார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணில் போடும்போது மழை நீர் பூமியில் சேர்வதை தடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை விவசாய பாதிப்புகள் ஏற்படும். நாம் பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை தொட்டியில் போடும் பழக்கம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நம்மால் இயற்கை பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.


என் ஐ ஐ டி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் பேசும்போது பிளாஸ்டிக் கழிவுகளை மக்க வைக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க வேண்டும் என்றார். 


நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டது தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தங்கராசு தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


நிகழ்ச்சியில் நுகர்வோர் பிரதிநிதி தேவஞானம், என் ஐ ஐ டி பவுண்டேஷன் அஸ்வதி, நவீன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad