2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு


2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு



2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தினைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கப்படுகிறது 



நீலகிரி மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சர்வதேச  தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூபாய் 6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறார்கள்.    தகுதி வாய்ந்தவர்கள்:     தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் தற்போது நலிந்த நிலையில் வருமானம் குறைந்து வேலை இல்லாத நிலை போன்றவை இருக்க வேண்டும். இதில் அரசு தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை மற்றும் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை  என பெற்றோர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.       


குறைந்தபட்ச தகுதி.        சர்வதேச தேசிய போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றுத்தல் வேண்டும் அல்லது சர்வதேச தேசிய தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.                தகுதியான விளையாட்டுப் போட்டிகள். ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சமயங்களால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள். ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பங்கு பெற்று இருக்க வேண்டும்.                    


வயதுவரம்புகள்  2025 ஆம் வருடம் ஆகஸ்ட் 30.04.2025 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.  மாத வருமானம்.      விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000/- மிகாமல் இருத்தல் வேண்டும் இதற்கான 2025 ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பிதிட வேண்டும்.                                 


விண்ணப்பிக்கும் முறை  தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் கிடைக்கும் மற்றும் தொடர்புடைய விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள்.              விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்          விளையாட்டு சாதனங்களுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் ஆதார் பிறப்பிடச் சான்று 2025 ஆம் ஆண்டு பெற்றெடுத்தல் வேண்டும் வருமானச் சான்று 2025 ஆம் ஆண்டு பெற்றெடுத்தல் வேண்டும் ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் வேண்டும்.         விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பதாரர் சார்ந்த மாவட்டத்தில் உள்ள மாவட்டம் மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும.       முக்கிய குறிப்பு                    விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பதாரர் நீலகிரி மாவட்டம் உதவிலுள்ள மாவட்டம் மற்றும் இளைஞர்கள் அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே வழங்க வேண்டும் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரவு அல்லது அஞ்சல் முலவோ அனுப்பி விட தேவையில்லை.                     விண்ணப்பிக்க கடைசி தேதி   ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 24 06 2025 முதல் 31 07 2025 வரை வழங்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஒரே ஆவணத்துடன் இணைத்து 31 07 2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதாரர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எச் ஏ டி பி திறந்தவெளி விளையாட்டரங்கம் உதகமண்டலம் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். இந்த விண்ணப்பத்தை விண்ணப்பித்து நலிந்த நிலையில் உள்ள தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் பயனடைந்து விடுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad