மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நீலகிரி மாவட்டம் உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் தாவரவியல் பூங்கா சாலையில் 02-08-2025 ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. இவை அனைத்தும் கோவை திருப்பூர் ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ளது.இவை முன்னணி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு ஆகும். அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழி காட்டுதல்கள் மற்றும் TNSDC மற்றும் DDU GKY யின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி காண பதிவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதன் கல்வி தகுதிகள் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை ஐடிஐ டிப்ளமோ நர்சிங் பார்மசி பொறியியல் என அனைத்து கல்வி தகுதிகளும் எடுத்து கொள்ளப்படும். அனைவருக்கும் அனுமதி இலவசம் . அனைவரும் வரும்பொழுது தங்களுடைய பயோடேட்டா அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டகள் எடுத்து வரவும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0423-2444044, மற்றும் 9499055948 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக