கூடலூர் பகுதியில் பழங்குடியினருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஜூலை, 2025

கூடலூர் பகுதியில் பழங்குடியினருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.


கூடலூர் பகுதியில் பழங்குடியினருக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 


கூடலூர் அருகே முதுமலை ஊராட்சி தேவர்சோலை பேரூராட்சி, நெலாக்கோட்டை ஊராட்சி பழங்குடி கிராம மக்களுக்கு கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பாவை பவுன்டேசன் சார்பாக அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு பாவை பவுண்டேஷன் நிர்வாகி அருண்  தலைமை தாங்கினார். நிர்வாகி ராம் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் முதுமலை ஊராட்சி - முதுகுளி, தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, வீச்சனாங்கொல்லி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி பெண்ணை, பாலப்பள்ளி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. 


இந்த நிகழ்ச்சியில் பாவை அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad