சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரமிடு IAS அகடமி மூலமாக அரசு பள்ளிகளில் அரசு உதவி வரும் பள்ளிகளில் மற்றும் தனியார் பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் பயின்ற மாணவர்களுக்கு ஓராண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான MBBS மற்றும் BDS படிப்புக்கான கலந்தாய்வு 30.07.2025 அன்று நடைபெற்றது.
பிரமிடு அகடமி மூலமாக பயிற்சியில் பங்கு பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் 10 மாணவர்களுக்கு MBBS படிப்பும் மூவருக்கு BDS படிப்பும் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் பயின்று இலவச பயிற்சி பெற்று கலந்தாய்வுக்காக காத்திருக்கும் மேலும் மூன்று மாணவிகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் கலந்தாய்வில் எம்பிபிஎஸ் கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது.
சிவகங்கை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த இளையான்குடியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் திரு மாரிமுத்துவின் மகன் கோகுல குகன் என்பவருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த கொடி வயலைச் சேர்ந்த விவசாயி திரு பாலச்சந்திரனின் மகள் தனுஷா என்பவருக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த கூகநூரை சேர்ந்த விவசாயி திரு ராமநாதன் என்பவரின் மகன் அன்புமணி என்பவருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. உத்திரமேரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த உத்திரமேரூரை சேர்ந்த விவசாயி திரு காலி என்பவரின் மகள் வர்ஷினி என்பவருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ் கிடைத்துள்ளது. மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற செல்லூரைச் சேர்ந்த திரு வேல்முருகன் அவர்களின் மகள் ரம்யா தேவிக்கு நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த விவசாயி திரு சின்னத்தம்பி என்பவரின் மகள் மதன்ராஜ் என்பவருக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த அரசம்பட்டியைச் சேர்ந்த திரு சேதுராமன் அவர்களின் மகள் கார்த்திகா என்பவருக்கு ஸ்ரீ மூகாம்பிகை இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த வடவாளத்தை சேர்ந்த விவசாயி திரு சிங்காரம் என்பவரின் மகள் துர்கா தேவி என்பவருக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த அறந்தாங்கியைச் சார்ந்த விவசாயி திரு பாலு என்பவரின் மகன் சிரஞ்சீவி என்பவருக்கு கன்னியாகுமாரி மெடிக்கல் மிஷன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது. ஆர் எஸ் மங்கலத்தைச் சேர்ந்த திரு தியாகராஜன் என்பவரின் மகள் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த ஜனனி என்பவருக்கு தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் கிடைத்துள்ளது.
காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்த சிவகங்கை மாவட்ட காரைக்குடியை சேர்ந்த விவசாயி திரு முத்தையா என்பவரின் மகள் பாரதி என்பவருக்கு மதுரை சி எஸ் ஐ தனியார் டென்டல் காலேஜ் பி டி எஸ் கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்ரமணியபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த கோடி வயலை சேர்ந்த விவசாயி திரு ரவிச்சந்திரன் மகன் அகிலன் என்பவருக்கு 3 50 இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி டி எஸ் கிடைத்துள்ளது.
நாகப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த நாகப்பட்டினத்தை சேர்ந்த திரு குமார் என்பவரின் மகன் முகுந்தன் என்பவருக்கு தாகூர் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு பெற்றுள்ளவர்களின் முழு கல்வி செலவினை அரசே செலவிடும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ பயின்ற காரைக்குடி பிரமிடு ஐ ஏ எஸ் அகாடமி மூலமாக ஓராண்டு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற்று கலந்தாய்வுக்காக காத்திருக்கும் காரைக்குடி சகாய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி ஸ்ரீ ஆவுடையார் கோவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலா மதுரை ஓ சி பி எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாரு தர்ஷினி என்ற மாணவிகளுக்கும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் கலந்தாய்வில் எம்பிபிஎஸ் கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக