பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மியம்மாள் மற்றும் ஸ்ரீ வெள்ளையம்மாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஜூலை, 2025

பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மியம்மாள் மற்றும் ஸ்ரீ வெள்ளையம்மாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி  கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மியம்மாள்.மற்றும் ஸ்ரீவெள்ளையம்மாள்,ஸ்ரீ வீரனார் ஆலய  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது   பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம்  யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று பின்னர் கடங்கள்  புறப்பாடாகி ஆலயங்களை சுற்றி வலம் வந்து  புனித நீர் கலசம் கோவில் கோபுரங்கள் மீது கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஸ்ரீ பொம்மியம்மாள்  மற்றும் வெள்ளையம்மாள்,ஸ்ரீ வீரனார் ஆலய கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை சோழங்கனார் குலதெய்வ வழிபாட்டாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad