திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது இந்த பேருந்து நிலையத்தில் உடுமலை நகராட்சி நிர்வாகம் உள்கட்டமைப்பு பணிகள் சரிவர செய்யாத காரணத்தால் பழநி செல்லும்பேருந்துகள் நிற்பதற்கும் , பயணிகள் ஏறுவதற்கும் சரியான வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை கடும் வெயிலில் மழையில் ஒதுங்குவதற்கு நிழற்குடை இல்லை அமர்வதற்கு இருக்கைகள் இல்லை குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த உடுமலைப்பேட்டை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக