கோவை கா கா சாவடியில் அமைந்துள்ள தானீஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இன்போசிஸ் பவுண்டேசன், சென்னை நிறுவனத்துடன் இணைந்து 30 ஜூலை 2025 அன்று அனைத்து துறை மாணவிகளுக்குமான வேலைவாய்ப்பு பயிற்சி துவக்க நிகழ்ச்சியை நடத்தப்பட்டது.
இந் நிகழ்வு, மாணவிகள் தொழில்முனைவு நம்பிக்கையுடன் செயல்படவும், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான தயாரிப்பை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
நிகழ்வின் தொடக்கவிழா காலை 10.30 மணிக்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. முக்கிய விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. ஜே. ஆன்டனி ஜெரால்டு ஆனந்த், தலைவர் மற்றும் நிறுவனர் மைன்ட் ஸ்பா டெக்னாலாஜிஸ், சென்னை, மாணவிகளின் மூலதனமாக்கல் முக்கியத்துவம் மற்றும் நிறுவனங்களில் தரமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் பெறுவதின் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
நிகழ்வை திரு.கே.ஏ.அக்பர் பாஷா, இயக்குனர், தலைமை.திரு. ஏ. தமீஸ் அகமது, தலைமை நிர்வாக அதிகாரி, நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
முதல்வர் டாக்டர். கே.ஜி. பார்த்திபன் வரவேற்புரை வழங்க, துணை முதல்வர் டாக்டர். ஜி. ரங்கநாதன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்களை ஏற்பாட்டினை பேராசிரியர் திரு. ஜனார்ததான் மற்றும் மாணவ மாணவியர் சிறப்புறை செய்திருந்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக