பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். நகராட்சி மேலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் தவமணி பேசும்போது குழந்தைகள் மீதான குற்றங்களை குறைவதற்கு குழந்தைகள் பாதுகாப்பு குழு கண்காணிப்பு அவசியம். பள்ளி செல்லா குழந்தைகள், இளம் வயது சிறுமிகள் பெரும்பாலும் குற்றங்களில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை தடுக்க நடவடிக்கை அவசியம். விரைவில் கூடலூர் பேருந்து நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் 1098 அமைக்கபடவுள்ளது. அதுபோல் குழந்தைகள் இல்லம் கூடலூரில் ஆரம்பித்து உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், மன நலன் ஆகியன கண்காணித்து குற்றங்களை குறைக்க குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பட வேண்டும். என்றார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபாணி, தேவாலா காவல் உதவி ஆய்வாளர் ருக்மணி, காவலர் தங்கமலர், கவுன்சிலர் பன்னீர்செல்வம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத், சமூக ஆர்வலர்கள் காளிமுத்து, இந்திரஜித், யோகேஸ்வரி, சுலோச்சனா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்த வார்டுகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து பள்ளிகளிலும் எல்லா பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பாதுகாப்பு கருதி பந்தலூர் பேருந்து நிலையம் மற்றும் மாணவர்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், போதைப் பொருள் நடமாட்டம் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளதல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நகராட்சி கணக்காளர் ஜெபமாலை கிளாடிஸ் வரவேற்றார். முடிவில் நகராட்சி பரப்புரையாளர் சிந்துஜா நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக