பாடந்தொரை (மாரக்கரை) அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச சதுரங்க தினம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

பாடந்தொரை (மாரக்கரை) அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச சதுரங்க தினம்


கூடலூர் அருகே பாடந்தொரை (மாரக்கரை) அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச சதுரங்க தினம் (செஸ் போட்டி) தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.


ஆல் தி சில்ரன் அமைப்பு மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் சர்வதேச செஸ் சதுரங்க விளையாட்டு தினத்தை முன்னிட்டு படந்தொரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது 


பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகோபால் தலைமை தாங்கி சதுரங்க விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.


பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன் தாஸ், ஆசிரியர் பிரபு சங்கர், மங்கையர்கரசி, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், என்ஐஐடி பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது போட்டி விளையாடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவதற்கும், மூளையின் செல்கள் அதிகமாக செயல்படுவதற்கும், மாணவர்களின் சிந்திக்கும் திறனை அதிகப் படுத்துவதற்கும் உதவுகிறது.  இதனால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்வது தவிர்க்கப்பட்டு கல்வியில் ஆர்வம் பெருகி, படிப்பில் வெற்றி பெற முடிகிறது என்பது நிருபனமாகியுள்ளது. மாணவர்கள் அவ்வப்போது சதுரங்க போட்டியை நிதானமாக, கவனமுடன் விளையாடி தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு சாதனையாளர்களாக மாற வேண்டும் என்றார். 


தொடர்ந்து 6,7,8 ம் வகுப்பு பிரிவில் முதல் இடம்

பஹத் (6-ம் வகுப்பு)

இரண்டாம் இடம்

கீர்த்திகா (8ம் வகுப்பு)

மூன்றாம் இடம் 

கிருதிக் (6 ம் வகுப்பு) ஆகியோருக்கும்

9, 10ம் வகுப்பு பிரிவில்

முதல் இடம்

முஸம்மில் (10ம் வகுப்பு)

இரண்டாம் இடம்

அம்பிரியா கதீஜா (9 ம் வகுப்பு)

மூன்றாம் இடம் 

அப்துல் பாயஸ் (9 ம் வகுப்பு) ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளிக்கு சதுரங்க செஸ்  விளையாட்டு போர்டுகளும் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad