விழுப்புரம், ஜூலை 25,
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவேக) வழக்கறிஞர் அணியில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டது. மாவட்ட செயலாளர் திரு. விஜய்வடிவேல் அவர்களை நேரில் சந்தித்துவிட்டு, முப்பது இற்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள், தவேக வழக்கறிஞர் அணியில் உறுப்பினராக இணைந்தனர்.
இந்த நிகழ்வின் போது, தவே தலைவர் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கறிஞர் பிரிவை பலப்படுத்தும் நோக்கில், உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதியதாக சேர்க்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு, கட்சியின் கொள்கைகள், வழக்கறிஞர் பிரிவின் செயல்வடிவங்கள், மற்றும் சட்ட உதவித் திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அதுபோல, மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளிலும், பொறுப்பு வகிக்கும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள், மாநில அளவில் தவேக கட்சியின் சட்ட உதவித்துறையை உறுதியான அமைப்பாக உருவாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
🖊 – செய்தியாளர் - அருள்.சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக