விழுப்புரம், ஜூலை 25,
தமிழ்நாடு அரசின் முக்கிய மக்கள் சேவை திட்டமான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம், விழுப்புரம் மாவட்டம் ஆலன்குப்பம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆலோசனையின் கீழ் இன்று நடைபெற்றது.
இந்த திட்டம், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று, அரசு சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கத்தில் statewide ஆக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய முகாமில், ஆலன்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது பல்வேறு பிரச்சனைகளை மனுக்களாக வழங்கினர். மாவட்டம் முழுவதும், 291 முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதில்:
-
236 முகாம்கள் ஊரக பகுதிகளில்
-
55 முகாம்கள் நகராட்சிகளில் நடைபெற உள்ளது.
மேலும், விழுப்புரம் நகராட்சி, செஞ்சி பேரூராட்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், முகையூர், கண்டமங்கலம் போன்ற பகுதிகளிலும் இது போன்ற முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அளிக்கும் மனுக்களை அடிப்படையாகக் கொண்டு, 45 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
🖊 – செய்தியாளர் : அருள்.சி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக