சேத்தியாத்தோப்பு கருப்ப சாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

சேத்தியாத்தோப்பு கருப்ப சாமி கோயிலில் ஆடி அமாவாசை விழா. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.




கடலூர் மாவட்டம் சேத்தியாதப்பு குறுக்கு ரோட்டுப்பகுதியில்  விநாயகபுரம் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில்
ஆடி அமாவாசையல முன்னிட்டும் , கோவிலின் 25 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டும் நடைபெற்றது. 


கடந்த 16ஆம் தேதி கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசைப் பெருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதையடுத்து அங்காளம்மன் 
வீதியுலா நிகழ்ச்சியும், பெரியாண்டவர், பெரியநாயகி 
திருக்கல்யாணமும் நடைபெற்றது.‌ இதையடுத்து ஆடி அமாவாசையை முன்னிட்டு உலக மக்கள் நன்மை வேண்டி ‌ தாரை தப்பட்டை கேரள செண்டை மேளதாளங்கள் முழங்க ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து நீண்ட தூரம் ஊர்வலமாக சென்று
கருப்பசாமி கோவிலுக்கு வந்தடைந்தனர். 


அதன் பிறகு கருப்பசாமிக்கு ‌ படி பூஜை, பக்தர்கள் சுமந்து வந்த பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.  பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.


இந்த ஆடி அமாவாசை விழாவில்  பல பகுதிகளில் இருந்து வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவர் கருப்பசாமியை வணங்கியும் சென்றனர்.‌  நிறைவாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad