சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வளாகத்தை சுற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் கல்லூரியின் முதல்வர், தேசிய மாணவர் படை மாணவர்களோடு இணைந்து கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக