கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சோளத்தட்டு ஏற்றி வந்த ஈச்சர் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது !!!
கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த ராம நாராயணா மில் எதிரில் சோளத்தட்டு ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
டிரைவருடன் கேபினில் அமர்ந்திருந்த வண்டியின் உரிமையாளர் துளசி அம்மாள்(55) படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தின் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக