பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகர செயலாளர் மதியழகன் மாவட்ட செயலா ளர் நாகராஜன் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம்!!
வேலூர் , ஜுலை 20 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சின்னல்லாபுரம் மந்தைவெளி எனும் பகுதி, 4வது மண்டலம் தெற்கு, டாக்டர். அகர்வால் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் பாரதிய
ஜனதா கட்சி வேலூர் மாநகரம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், பாரதிய ஜனதா கட்சி தொரப்பாடி நகர தலைவர் மதியழகன் மற்றும் பாஜக மாவட்ட செயலாளரும்,வழக்கறிஞருமான நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியா யினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இந்த மாபெரும் கண் சிகிச் சை முகாமில் பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சிகிச்சைக்கான முறைகளையும் மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கான விவரத் தையும் கேட்டுறிந்து பயன் பெற்றனர். இதில் 16 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து கண் கண்ணாடி இலவசமாக வழங்கினர்.இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி தொரப்பாடி நகர மண்டல பொதுச் செயலாளர்கள் பாபு செல்வராஜ், மண்டல துணைத் தலைவர் கள் சசிகுமார் இளங்கோ மற்றும் பாஜக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பி னர்கள், டாக்டர் அகர்வால் மருத்துவ மனை மருத்துவர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டு இந்த மாபெரும் கண் சிகிச்சை முகாமை சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக