கூடலூர் அருகே செம்பகொல்லி அங்கன்வாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஜூலை, 2025

கூடலூர் அருகே செம்பகொல்லி அங்கன்வாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்


கூடலூர் அருகே செம்பகொல்லி அங்கன்வாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது முகாமில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 10 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து அழைத்து செல்லப்பட்டனர்


நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஆல்ஃபா லாங்குவேஜ் ரிசர்ச் பவுண்டேஷன், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன இணைந்து செம்பக்கொல்லி  அங்கன்வாடி மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு ஆல்ஃபா லாங்குவேஜ் ரிசர்ச் பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் குமார் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 


தேவர்சோலை காவல் உதவி ஆய்வாளர் சரவணன்,  தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் யுனைஸ்பாபு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.  


உதகை அரசு மருத்துவ கல்லூரி முதுநிலை மருத்துவர் மற்றும் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் மரு. ரேகா தலைமையில் மருத்துவர்கள் ஶ்ரீநாத், சதீஷ், சிவரஞ்சனி உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை, சிகிச்சைகள் அளித்தனர்.


இதில் 15 பேர் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் 2 பேருக்கு கண் சதை வளர்ச்சி உள்ளிட்ட குறைபாடுகளும் கண்டறியபட்டது. 2 பேருக்கு கருவிழி பதிப்பு கண்டறியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 10 பேர் மருத்துவ ஆலோசனைப்படி இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். ஶ்ரீ மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர்கள் மோனிஷா, அனிதா, ஆஷா பணியாளர்கள் அம்பி, காளி அடங்கிய குழுவினர் இரத்த அழுத்தம் இரத்த சர்க்கரை அளவு பரிசோதனைகள் மேற்கொண்டனர். 


நிகழ்ச்சியில் காவலர்கள் பிரபாகரன், முகுந்தன், கிராம தலைவர்கள் விஜயன், சுரேஷ், ரதா, அங்கன்வாடி அமைப்பாளர் சைலஜா, ஆல்ஃபா லாங்குவேஜ் ரிசர்ச் அண்ட் ஏஜுகேஷன் பவுண்டேஷன் செவிலியர் பவித்திரா, ஆசிரியர்கள் ஷோபா, மலர்தேவி, அருண்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad