சேத்தியாத்தோப்பு அருகே வட்டத்தூர் பைபாஸ் சாலையில்
சொகுசு கார் மோதி ஒருவர் பலி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வட்டத்தூர் பகுதியில் நான்கு வழி சாலை செல்கிறது. இங்கு அருகில் உள்ள பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் இருந்து சிதம்பரம் நகரத்தில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பார்த்திபன் (39) என்பவர் மீது பின்னால் வந்த சொகுசு கார் மோதியதில் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோடி சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நான்கு வழிச்சாலையில் சில தினங்களுக்கு முன்பு நங்குடிப் பகுதியில் இரண்டு பேர் வாகனம் மோதி உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி வரும் இப்பகுதியில் போதிய விபத்துத் தடுப்பு பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக