தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஜூலை, 2025

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு கூட்டம்!

தமிழ்நாடு  அறிவியல் இயக்க மாநில செயற்குழு கூட்டம்!
வேலூர் , ஜுலை 20 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இரண்டு நாள் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் வேலூர் மாவட்ட அறிக்கையை செயலாளர் செ. நா.ஜனார்த்தனன் அவர்களால் சமர்ப்பிக் கப்பட்டது. கரூர் கொங்கு திருமண மண்ட பத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி..திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எம். எஸ்.முகமது பாதுஷா செயற்குழு அறிக்கை சமர்ப்பித்து பேசி னார் மாநில பொருளாளர் டி. சுதாகர் நிதி அறிக்கை சமர்ப்பித்து பேசினார். வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாவட்ட அறிக்கை சமர் ப்பித்து பேசினார் ராணிப்பேட்டைமாவட்ட செயலாளர் கே. பழனிவேலு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பி. அச்சுதன்
முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி மாநில செயற்குழு உறுப்பினர் பி. ஜெயசுதா  சிவஸ்ரீ ரமேஷ் கரூர் மாவட்ட செயலாளர் ஜான் பாஸ்கர் தலைவர் வி எஸ் பாஸ்கர் இணை செயலாளர் சாகுல் அமீது நிர்வாகிகள் என் மாதவன் எஸ் டி. பாலகிருஷ்ணன், ஸ்டிபன் நாதன், முத்துலட்சுமி டாக்டர் அனு ரத்னா ராமமூர்த்தி சசிகுமார் பரம சிவன் தியாகராஜன் நாராயணசாமி தினகரன் இந்திய அகில இந்திய அறிவி யல் இயக்க நிர்வாகி  மோகனா உள்ளிட் டோர் பங்கேற்ற பேசினர். சூழலியல், சமம், ஆரோக்கிய இயக்கம், அறிவியல் வெளியீடு, கல்வி,  இளைஞர்களுக்கான அறிவியல், அறிவியல் பிரச்சாரம் உள்ளி ட்ட தலைப்புகளில் விவாதம் நடை பெற்றது. மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது இரண்டா வது நாள் கூட்டத்தில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு வேலூர் மாவட்ட தலைவர் ஜனார்த்தனையிடம் நூலினை வழங்கி னார்.முடிவில் மாநில பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad