தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் சேர்ந்து நடத்திய மருத்துவமுகாம் .
கோவை க.க சாவடியில் அமைந்து உள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியும்,அரவிந்த் கண் மருத்துவமனையும், க க சாவடியில் உள்ள ஸ்ரீ லட்சுமி மருத்துவமனை வளாகத்தில் நீரழிவு குறித்த விழிப்புணர்வு முகாம், கண் புரை நோய், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவ முகாம், பொது மருத்துவம், உணவு முறை குறித்த விழிப்புணர்வு. இம்முகாமில் பயனாளிகளுக்கு சிகிச்சை முறையும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர்.இம் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் திரு சந்திரோதயம், திருமதி.புவனேஸ்வரி, திரு எல்டோ ராஜ், திருமதி.சபர் நிஷா, திருமதி.மகேஸ்வரி, திரு வெள்ளைச்சாமி, அரவிந்த் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி திரு பழனிசாமி மற்றும் கல்லூரியுன் நிர்வாகஇயக்குனர் திரு கே ஏ அக்பர் பாஷா, தலைமை நிர்வாக செயல் அதிகாரி திரு தமீஸ் அஹமது, முதல்வர் முனைவர் கே ஜி பார்த்திபன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு தினேஷ் குமார் ஆகியோர்கள் ,கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக