வரப்பு தகராறலில் தம்பி மகனை வெட்டிய பெரியப்பா சிகிச்சை பெற்று வந்த தம்பி மகன் உயிர் இழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஜூலை, 2025

வரப்பு தகராறலில் தம்பி மகனை வெட்டிய பெரியப்பா சிகிச்சை பெற்று வந்த தம்பி மகன் உயிர் இழப்பு!

 வரப்பு தகராறலில்  தம்பி மகனை வெட்டிய பெரியப்பா சிகிச்சை பெற்று வந்த தம்பி மகன் உயிர் இழப்பு!
குடியாத்தம் , ஜூலை 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியில் நில தகராறு காரணமாக கடந்த  6 7 2025 அன்று ரமேஷ் (வயது 35) என்பவரை இவரது பெரியப்பா விநாயகர்  ( வயது 82) என்பவர் மண்வெட்டியால் கழுத்தில் வெட்டினார் படுகாயம் அடைந்த ரமேஷ் உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்நிலையில் ரமேஷின் உறவினர்கள் மண்வெட்டியால் வெட்டிய பெரிய விநாயகம்  மீது  நடவடிக் கை எடுக்க கோரியும் அவரைஉடனடியாக கைது செய்ய கோரியும் காவல் நிலையம் எதிரில் சாலை மறியல் ஈடுபட்டனர்
இதனை அடுத்து போலீசார்உரிய நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்ற னர் இதனை அடுத்து மண்வெட்டியால் வெட்டிய விநாயகம் (வயது 82) என்ற முதியவரை குடியாத்தம் தாலுக்கா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad