கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌமியா வயது 25 இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார், அந்த மனுவில் கூறி இருப்பதாவது எனக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கல் குணம் வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளம் தாங்கி மகன் ராஜேந்திரன் என்பவருக்கும் கடந்த 5.9.2024 அன்று குறிஞ்சிப்பாடி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
எனது திருமணத்திற்கு எனது மாமியார் கலியம்மாள் மாமனார் வெள்ளந்தாங்கி கணவரின் சகோதரர் ராஜேஷ் அவரது மனைவி ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையாக ஆறு பவுன் தங்க நகையும் 50000 ரொக்க பணமும் மற்றும் பாத்திர பண்டங்கள் சுமார் 3 லட்சத்திற்கும் ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம் போன்றவற்றை எனது தந்தை எனது திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்தார். திருமணம் முடிந்த பின்னர் எனது கணவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததால் மீண்டும் வேலைக்கு செல்வதாக கூறி என்னை அழைத்துக் கொண்டு வந்து எனது தந்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.
நான் கருவுற்ற நிலையில் எனது தந்தை வீட்டில் சிறிது நாட்கள் இருந்து வந்தேன் பொங்கலுக்கு விடுமுறைக்கு வீடு திரும்பிய எனது கணவர் என்னை எனது தந்தை வீட்டில் இருந்து மீண்டும் எனது கணவர் வீட்டிற்கு அழைத்துவந்ததும் எனது மாமியார் எனது கணவரின் அண்ணன் ராஜேஷ் அவரது மனைவி ரேவதி மற்றும் மாமனார் ஆகியோர்கள் மிரட்டினர். மேலும் உங்களது மாடி வீட்டை உனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வற்புருத்தி வாங்கு இல்லை என்றால் உனது வலையை காப்பிற்கு உனது குடும்பத்தினர்கள் யாரும் எங்கள் வீட்டிற்கு வரக்கூடாது என்னை கட்டாயப்படுத்தி தொடர்ந்து மனரீதியாகவும் உடல் ரீதியாக எனக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
கடந்த 13. 2.2025 எனது கணவர் வேலையின் காரணமாக மீண்டும் கோயம்புத்தூர் சென்று விட்டார் இந்த நிலையில் என்னை வராதட்சனைக்காக அடித்து துன்புறுத்தியாதால்கடும் இரத்தபோக்கு உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் எனது தந்தை தாய்க்கு தகவல் தெரிவித்தார் என்னை சிதம்பரம் மருத்துவ கல்லூரி சேர்த்து விட்டார் எனவே எனக்கு இவர்கள் தந்த மன உளைச்சல் மற்றும் உடல்நலம் பாதிக்ப்பட்டதால் 8 மாத குறை பிரவசவமாக ஆண் குழந்தை பிறந்தது இந்த தகவலை எனது கணவரிடம் தெரிவித்தோம் தொடர்ந்து எனது கணவர் ராஜேந்திரன் எனக்கு இந்த குழந்தை பிறக்கவில்லை என்றும் இனிமேல் நீ எனக்கு தேவையில்லை என்றும் சென்றுவிட்டார் எனவே தனக்கு உரிய விசாரணை நடத்தி சரியான நியாயம் கிடைக்க வேண்டும் எனசம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான தண்டனையும் கிடைக்கவேண்டும் என கடலூர் மாவட்ட காவல் கண்கனிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக