நத்தம் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பேருந்து கொடியசைத்து துவக்கி வைத்த எம் எல் ஏ!
திருப்பத்தூர், ஜுலை 9 -
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற உறுப் பினர் நத்தம் கிராம பெண்களுக்காக விடியல் பயணம் பேருந்து தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப் பினர் நல்லதம்பி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட நத்தம் கிராம மகளிரின் கோரிக்கையை ஏற்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் A நல்லதம்பி எம்எல்ஏ அவர்கள் மகளிரிருக்கு விடியல் பயனர் பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் நடத்துனர் ஓட்டுனர் பேருந்து கழக அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.கந்திலி ஒன்றி யத்துக்கு உட்பட்ட நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் பொதுமக்களுக்காக சட்டமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு பெண்களுக்கான விடியல் பயணம் பேருந்து எங்களது ஊராட்சியில் நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி இந்த நிகழ்சியில் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சு.அரசு, கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.முருகே சன், K.A.குணசேகரன், கந்திலி ஒன்றிய குழு துணை தலைவர் மோகன்குமார், ஒன்றிய கழக அவைத்தலைவர் ஆனந் தன், ஊராட்சி மன்ற தலைவர் கருணா நிதி, கழக செயலாளர் குமார், நகர மன்ற உறுப்பினர் ஜீவிதாபார்த்திபன், திருப்பத் தூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கு.பிரேம்குமார் , கழக நிர்வாகிகள், போக்குவரத்து கழக ஊழியர்கள் , மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.மகளிர்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றி தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #A_நல்லதம்பி.MLA, நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக