சந்திரபுரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

சந்திரபுரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சந்திரபுரம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

ஜோலார்பேட்டை  ஜுலை18

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் 6 ஏக்கர் தீர்வை ஏற்படாத தரிச நிலத்தில் குடிசை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவ ட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம்  சந்திர புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கெட்டி கொல்லி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இவர்கள் கூலிவேலை செய்து வரும் நிலையில் இவர்கள் தங்குவற்கு வீடு இல்லை எனவும், மேலும் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆறு ஏக்கர் தீர்வை ஏற்படாத தரிசநிலத் தில் இவர்கள் குடிசை அமைக்க சென்று ள்ளனர். அப்போது ஏற்கனவே அந்த ஆறு ஏக்கர் தீர்வை ஏற்படாத தரிசநிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நரிநெறி பஞ்சாயத்து பொதுமக்கள் இது எங்களு க்கு சொந்தமான இடம் நீங்கள் யாரும் வரக்கூடாது எனகூறி அங்கு குடிசை அமைக்க விடாமல் தகராறில் ஈடுபட்டுள் ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கெட்டிகொல்லி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்திர புரம் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வ நாதன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad