புளியம்பாறை நாரங்ககடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்திநெல்லியாளம் நகராட்சி முன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

புளியம்பாறை நாரங்ககடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்திநெல்லியாளம் நகராட்சி முன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

 


புளியம்பாறை நாரங்ககடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்திநெல்லியாளம் நகராட்சி முன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் 


புளியம்பாறை நாரங்ககடவு ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கிய பின்னும் வனத்துறையானது கான்கிரீட் பாலம் அமைய உள்ள இடத்தில் இரும்பு பாலம் அமைக்க உள்ளது. 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பாக உடனடியாக கான்கிரீட் பாலம் அமைய வேண்டும் என்று பலதரப்பட்ட போராட்டம் நடத்திய இன்றைய தினம் அறுபதுக்கு மேற்பட்ட காவல்துறையினரை குவித்து வனத்துறையானது தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வாக்குறுதிக்கு எதிராக இரும்பு பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் இராசி இரவிக்குமார் , தலைமையில் ஏரியா கமிட்டி செயலாளர் தோழர் ரமேஷ், ஏரியகமிட்டி உறுப்பினர்கள் ஹசைன்,சாஜி, பெரியார் மணிகண்டன், தோழர்கள் சுபைர் ,செரியாப்பு, குஞ்சலவி,சுலைமான், ரபீக், பாப்புட்டி,செரீப்,A,k ரவி, ஆகியோர் ...


வாயில் கருப்பு துணி கட்டி ஜனநாயகம் முறைக்கு எதிராக செயல்படக்கூடிய வனத்துறையை மற்றும் அதற்கு துணை போகும் நெல்லியாளம் நகராட்சியை கண்டித்து நெல்லியாளம் நகராட்சி முன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad