தமிழக பள்ளிகளில் இனி "கடைசி பெஞ்ச்" கிடையாது - வகுப்பறையில் 'ப' வடிவம் இருக்கைகள் அமைக்க அரசு உத்தரவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

தமிழக பள்ளிகளில் இனி "கடைசி பெஞ்ச்" கிடையாது - வகுப்பறையில் 'ப' வடிவம் இருக்கைகள் அமைக்க அரசு உத்தரவு!

தமிழக பள்ளிகளில் இனி "கடைசி பெஞ்ச்" கிடையாது - வகுப்பறையில் 'ப' வடிவம் இருக்கைகள் அமைக்க அரசு உத்தரவு!

வேலூர் , ஜுலை 12 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இனி "பின்வரிசை மாணவர்கள்" என்ற பிரிவே இல்லாத நிலையை உருவாக்கும் நோக் கில், வகுப்பறைகளில் 'ப' வடிவத்தில் மாணவர் இருக்கைகள் அமைக்க 
வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வகுப்பறையில்  பின் அமர்ந்த மாணவர்களுக்கு பலகை தெளி வாக தெரியாததாலும், ஆசிரியரின் கவனத்துக்கு விலகி இருப்பதாலும் அவர் கள் குறைவான ஒழுக்கமும், குறைந்த மனோபக்குவத்தையும் காண்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. இதைத் தவிர்க் கும் வகையில், மாணவர்கள் அனைவரும் ஆசிரியரையும் பலகையையும் நேராகப் பார்க்கும் வகையில், வகுப்பறைகளை 'ப' வடிவமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த புதிய அம்சத்தின் மூலம், மாணவர்கள் நடுநிலை மனப்பாங் குடன் வகுப்பில் ஈடுபடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. மாணவர் ஒழுக்கம் மற்றும் கல்வித் தரத்தில் நல்ல முன்னே ற்றம் ஏற்படும் என்றும், அனைவரும் சமமாக கல்வியில் பங்கு பெறும் சூழல் உருவாகும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பள்ளி களில் தற்போது நடைமுறையில் உள்ள நேரடி வரிசை அமர்வுகளை முறையாக மாற்றி, விரைவில் அனைத்து பள்ளிகளி லும் 'ப' வடிவ அமர்வுகள் பூரணமாக அமையும் என அரசு திட்டமிட்டுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad