திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 14வது வார்டு மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள ரோட்டில் பள்ளி குழந்தைகள் வரும் வழியில் இது போல சுகாதாரக் கேட்டை பொதுமக்கள் உருவாக்கி இருக்கிறார்கள் குப்பை நாற்றத்துடன் ஒரு வாரமாக கிடக்கிறது சுகாதார மேஸ்திரி இதை கண்டு கொள்வதில்லை சுகாதார ஆய்வாளர் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை சுத்தம் செய்து தர வேண்டும் மேலும் இந்த ரோட்டில் சாக்கடை லிருந்து எடுத்த கழிவுகள் இருபுறமும் கொட்டப்பட்டுள்ளது இது குறுகிய சந்து என்பதால் நடப்பதற்கு வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது துர்நாற்றத்துடன் வீசிக் கொண்டிருப்பதால் இந்த பகுதியில் பள்ளி குழந்தைகள் நடமாட முடியவில்லை நோய் தொற்று ஏற்படுமோ என்று பயமாக உள்ளது எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கழிவுகள் குப்பையும் பொதுமக்கள் போட்ட இந்த குப்பையும் அள்ள வேண்டும் சுத்தப்படுத்த வேண்டும் பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுகின்றனர்
மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக