குடியாத்தத்தில் டிராக்டர்இன்ஜின் தூக்கி அடித்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!
குடியாத்தம் , ஜுலை 3 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோடி குப்பம் மதுரா, கீழ் கொல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த சுதாகர் த/பெ லேட்.கந்தசாமி (வயது 47) என்பவர்இன்று 02.07.2025 காலை 7.30 மணியளவில் மேற்படி நபருக்கு சொந்தமான புன்செய் சர்வே எண்.175/2 -ல் அவருக்கு சொந்த மான டிராக்டரில் TN18 CZ 3264 ஆலோ பிளாக் கல் ஏற்றி கொண்டு மேட்டில் ஏறும்போது டிராக்டர் இன்ஜீன் தூக்கி அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்து விட்டார். மேற்படி நபர் பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார். சுதாகர் தெய்வானை என்ற மனைவியும், 1 மகள், 2 மகன்கள் உள்ளனர் என்றும், விசாரணையில் தெரிய வருகிறது இது சம்பந்தமாக கிராமிய போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக