மதுரை மாவட்டம் மேலூர் அருகே காதலனை தனிமையில் சந்தித்த காதலி :
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய உதவிய காதலன் : மூவரை கைது செய்த மகளீர் காவல்துறையினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது சிறுமி இவர் தெற்குதெரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தீபன்ராஜ் (25) என்பவனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தீபன்ராஜும், 19 வயது சிறுமியும் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தீபன்ராஜின் நண்பர்களான மதன் (25), மற்றும் திருமாறன் (24) ஆகியோரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், தீபன்ராஜ், மற்றும் அவரது நண்பர்களான மதன், திருமாறன் ஆகியோரை மேலூர் அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் காஞ்சனாதேவி தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், காதலன் தீபன்ராஜ் ஆலோசனையின் படி சிறுமியுடன் தனிமையில் இருந்த போது மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற உத்தரவு படி மேலூர் கிளைச் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக