பொது இடத்தை தனி நபருக்கு அனுமதி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்! அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி!
காட்பாடி , ஜுலை 1 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தேன் பள்ளி ஊராட்சியில் பள்ளி மாணவ மாணவி களுக்கு மற்றும் பொது மக்களுக்காக படிப்பகம் வரும் என்று ஆசையில் மண்ணள்ளி தூற்றிய ஊராட்சி மன்ற தலைவர். காட்பாடி தேன் பள்ளி ஊராட்சி யில் ஊராட்சி தலைவர் மாலதி அவர் களின் கணவர் ரகு.இவர் மாணவ மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக் காக படிப்பகம் கட்டை இருந்த இடத்தை ஒரு தனி நபருக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரகு இதை தட்டிக் கேட்கும் வகையில் இளைஞர்கள் ரகுவை சாலையில் நிறுத்தி நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது வெங்கடாபுரம் அருந்ததி யர் காலனி மாணவ மாணவிகளுக்கு படிப்பகம் கட்டக் கூடாதா எங்கள் ஊரில் இருந்த பொது இடத்தை ஒரு தனி நபரு க்கு தருவாயா என்று கிராம இளைஞர் கள் கேள்வி எழுப்பினர். உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவிக் கரம் நீட்டு மாறு சமூக ஆர்வலர்கள் சார்பிலும் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக