அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் நீர் சத்துக் குறைபாடு தடுக்க வாட்டர் பெல் திட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் நீர் சத்துக் குறைபாடு தடுக்க வாட்டர் பெல் திட்டம் !

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் நீர் சத்துக் குறைபாடு தடுக்க வாட்டர்  பெல் திட்டம்!

காட்பாடி , ஜுலை 1 

வாட்டர் பெல் திட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேய நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெய்யிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும் நீர்சத்து குறை பாட்டால் மாணவர்கள் கற்றல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைதெரிவித்து ள்ளதன் அடிப்படையில் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைபடுத்த திட்டமிடப் பட்டுள்ளதை தொடர்ந்து காங்கேய நல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தண்ணீர் அருந்தும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.பள்ளியின் தலைமையாசிரியை பிரேமா தலைமை யில் பள்ளியின் ஆசிரியர்கள் இதனை மேற்பார்வையிட்டனர். பள்ளி மாணவி களிடம் மற்றும் ஆசிரியர்களிடம் மிகுந்த வரவேற்பு  வாட்டர் பில் திட்டம் என கூறினர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad