திருமாங்கல்யம் செய்த திருத்தலத்தில் திருமஞ்சன தரிசனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

திருமாங்கல்யம் செய்த திருத்தலத்தில் திருமஞ்சன தரிசனம்


திருமாங்கல்யம் செய்த திருத்தலத்தில் திருமஞ்சன தரிசனம்.



மதுரை மாநகரில் மட்டுமா மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலத்தில் அருளாட்சி புரியும் மீனாட்சி சொக்கநாதரையும் உசிலம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இத்திரு கோவில்.



மதுரையில் கோலாகலமாக நடைபெறும் வைபவங்களில் ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாண வைபவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அதாவது சிவனார் தரப்பிலிருந்து ஸ்ரீ அகத்திய மாமுனி இதோ இந்த திருமங்கலம் திருத்தலத்திற்கு திருமாங்கல்யம் எடுத்து வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் சொல்கிறது ஸ்தல புராணம்.



திருமாங்கல்யம் செய்த தலம் என்பதனால் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்ட பிறகு அதுவே மறுவி திருமங்கலம் என்று கூறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் மீனாட்சி சொக்கநாதருக்கு ஆனித் திருமஞ்சனம் விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்றது. நேற்று மாலை 6:00 மணி அளவில் நடராஜருக்கு முக்கனிகளால் ஆன மா பலா வாழை பழங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றது. இந்த ஆணை திருமஞ்சன விழாவிற்கு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு அருள் பிரசாதம் வாங்கி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad