ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது குடிக்க சமையல் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்வது வழக்கம்
விசைப்படகுகளுக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு சென்ற வாகனம் பாலத்தில் சென்றபோது திடீரென பாலம் உடைந்து வாகனம் உள்ளே விழுந்து சிக்கிக் கொண்டது அதில் வாகனத்தை ஓட்டிவந்தவர் அதிர்ஷாவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் பாலத்தில் சிக்கிக் கொண்ட வாகனத்தை அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் கிரேன்உஉதவி கொண்டு வாகனம் மீட்கப்பட்டது. அதிலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு பின்னர் வாகனம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது..
தரம் இல்லாமல் கட்டப்படும் பாலங்களால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக