இ எஸ் ஐ மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம் செய்த முதியவருக்கு பாராட்டு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

இ எஸ் ஐ மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம் செய்த முதியவருக்கு பாராட்டு விழா


 இ எஸ் ஐ மருத்துவ கல்லூரிக்கு உடல் தானம் செய்த முதியவருக்கு பாராட்டு விழா!


ரோட்டரி  மேட்டுப்பாளையம் பிரைம் சங்கத்தின் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் யூ பி எல் தொழிற்சாலை யில் தொழிலில் தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மகா தேவபுரம் மாதையன் லே-அவுட் சேர்ந்த 75 வயதுள்ள ஆர் பாபு என்பவர் கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனது உடலை தானமாக வழங்கியுள்ளார். அவருக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இதுகுறித்து பாபு கூறியதாவது நான்  கடந்த 47 வருடங்களாக இஎஸ்ஐ மருத்துவமனை சிகிச்சையை தவிர வேறு எங்கும் சிகிச்சை பெறவில்லை அதனால் நான் இறந்த பிறகு பலரும் பயன்பெறும் வகையில் கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்புக்கு பயன்பெறும் வகையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி என் உடலை தானம் செய்து அதற்காக பெருமைப்படுகிறேன் என்றார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad