ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம்!
குடியாத்தம் , ஜூலை 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் நேதாஜி இரண்டாவது தெருவில் அமைந் துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிரு ந்து பால் குடம் ஊர்வலம் தொடங்கியது. மேல தாளஙகள் முழுங்க சிலம்பாட்டம் நடனத்துடன் முக்கிய வீதிகளின் வழி யாக சென்று சௌடேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது .தொடர்ந்து விசேஷ பூஜைகள் சிறப்பு அலங்காரம் நடந்தது.
பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளைகோயில் நிர்வாகிகள் இமயவரம்பன் சொக்க லிங்கம் ராகவன் யுவராஜ் ஊர் பெரியவர் கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக