கல்லட்டி மலைபாதையில் வெளி மாநில வாகனங்கள்..
நீலகிரி மாவட்டத்தில் கல்லட்டி மலை பாதை மிகவும் ஆபத்து மிகுந்த சாலையாகும் இதில் வெளி மாநில வாகனங்களுக்கு அனுமதி கிடையாது மேலும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை ஊட்டி வாசிகள் நிறைய பேர் வைத்துள்ளார்கள் அந்தப் வாகனத்தை அனுமதிக்காத காவல்துறை இந்த வாகனங்களுக்கு எப்படி அனுமதி அளித்தது. வெளி மாநில வாகனங்களை வைத்திருக்கும் ஊட்டி வாசிகளுக்கு நீங்கள் பாஸ் வாங்கிக்கொண்டு தான் வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுகிறார்கள் ஆனால் இந்த வாகனங்கள் எப்படி கலந்து செல்கிறது என்று கேள்வி எல்லோர் மனதிலும் கேள்வியாய் எழுந்துள்ளது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும் உள்ளூர் வாகன ஓட்டுனர்களும் கேள்வி எழுப்புகின்றனர்
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக