பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்காமல் காலம் தாமதம் செய்யும் நீதிபதி கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
திருப்பத்தூர் , ஜுலை 3 -
திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து வருவதாகவும்
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினால் காவல்துறையினரை ஏவிவிட்டு பொய் வழக்கு போட்டு மிரட்டல் விடுவதாகவும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.இதனால் இன்று ஒருகிணை ந்த நீதிமன்றம் வளாகம் முன்பு மாவட்ட நீதிபதி மீனாகுமாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறகணித்து ஆர்பாட்டத் தில் ஈடுப்பட்டனர்.அப்போது மீனாகுமாரி யை பணியிட மாற்றம் செய்யும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லாமல் புறகணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.மேலும் வழக்கறிஞர்கள் கூறுகையில் நீதிபதி மூத்த வழக்கறிஞர்களை உங்களுக்கு சட்டம் தெரியுமா நீங்கள் என்ன புத்தகம் படித்திருக்கிறீர்கள் என வழக்கறிஞர் களை கேவலப்படுத்து விதமாக கேள்வி எழுப்புகிறார் பின்பு இளைஞர் வழக்கறி ஞர்களை நீங்கள் ஆடு மேய்ப்பதற்கு தான் லாக்கி என வழக்கறிஞர்களை கேவலமாக நடத்தும் நீதிபதியை சந்தித் தும் அவர்களின் போக்கை மாற்றிக் கொல்லாததால் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது மேலும் நீதிபதி யின் போக்கை மாற்றி தீர்வு கிடைக்க வில்லை என்றால் பல கோணத்தில் போராட்டம் தொடரும் என குறிப்பிடு கிறார்கள்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக