பேரணாம்பட்டு அருகே டிராக்டர் கவிழ்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு!
பேரணாம்பட்டு, ஜுலை 3 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி செல்லும் சாலையில் உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஹாலோ பிரிக்ஸ் கல் தயார் செய்யும் கம்பெனி அமைந்துள்ளது அதில் வடமாநிலத்தை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின் றனர். இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபாத் குமார் (வயது 23) லாலான் (வயது45) விஜய் (வயது23) ஆகிய மூன்று பேர் டிராக்டரில் ஹாலோ பிரிக்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு சென்றனர் அப்போதுபேரணா ம்பட்டு மேல்பட்டி சாலையின் வழியாக கார்கூர் கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர் அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புல ன்ஸ் வாகனம் வரவழைத்து சிகிச்சைக் காக குடியாத்தம் அரசு மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த லாலான் மேல் சிகிச்சை க்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் போகும் வழியிலே லாலான் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உத்தரவின் பெயரில் மேல்பட்டி சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக