காட்பாடி தேன்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு!!
காட்பாடி , ஜுலை 25
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தேன்பள்ளி ஊராட்சியில் கிருஷ்ணா தொழிற்பயிற்சி நிலையத்தில் நடை பெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கவுண்டர் கள் அமைத்து பொது மக்களின் புகார் மனுக்களை பெற்றனர், புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்த பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினர். இந்நிகழ்வின் போது வேலூர் மாவட்ட சுப்புலெட்சுமி, துணை மேயர் சுனில்குமார். வட்டாட்சியர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதி ரகு, அனைத்து துறை சார் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பொதுமக்களின் புகார் மனுக்களை பதிவேற்றம் செய்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக