குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி-போலீசார் விசாரணை !
குடியாத்தம் , ஜூலை 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டை பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவரின் மகன் மணி (வயது22) பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த பொழுது வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் உரசிய தில் மணி எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டார்.உடன் இருந்த நண்பர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதித்த மருத்து வர் அவர் வரும் வழியிலே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்மேலும் இது குறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக